Work on the construction of the Rs.5 lakh assessment: Started by MLA Bhaskar.
நாமக்கல்லில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
நாமக்கல் மெயின் ரோடு பழைய முன்சீப் அலுவலகம் இருந்த பகுதி மிகவும் அசுத்தமாகவும், மழைநீர் தேங்கி கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் புகழிடமாகவும் திகழ்ந்தது. மேலும் அருகில் அரசு பள்ளிக்கூடம் மற்றும் அலுவலகம் செயல்பட்டு வந்தது. எனவே இப்பகுதியை சீரமைத்து தருமாறு எம்எல்ஏ பாஸ்கரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைமனு கொடுத்தனர்.
இதனையடுத்து எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுத்தம் செய்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
விழாவிற்கு நாமக்கல் நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன் தலைமை வகித்தார். நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சேகர், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன்.ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
விழாவில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சாதிக் பாஷா, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு இணைச்செயலாளர் லியாகத் அலி, நாமக்கல் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பொரி சண்முகம், நகர துணை செயலாளர்கள் நரசிம்மன், சன்பாலு,சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் ராஜா, நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குநர் கைலாசம், நாமக்கல் வட்டார கூட்டுறவு வங்கி தலைவர் கமால் பாஷா, வார்டு செயலாளர்கள் சரவணன், சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சபரி மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.