World AIDS Day: Convention and Samurdhi Dinner at District Court premises

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பாக மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கருந்தரங்கம் மற்றும சமபந்தி போஜனம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலக எய்ட்ஸ் தினத்திற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மேலும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபர்கள் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் தொடர்ந்து ஏ.ஆர்.டி கூட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர தொகை ரூபாய் ஆயிரத்திற்கான ஆணை, எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட 82 குழந்தைகளுக்கு ரூ.1,91,000- அவரவர் வங்கி கணக்கிற்கு வரவு வைப்பதற்கான ஆணை, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பாதிக்கப்பட்ட நபர்களில் (அனாதை) அதிக மதிப்பெண் பெற்ற நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

அதிகளவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்தமைக்கு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி வினோதா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர், துணை இயக்குநர் சுகாதார பணிகள் ப. சம்பத், ஏ.ஆர்.டி மைய மருத்துவ அலுவலர் ரா. திவ்யா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் சுமதி, நம்பிக்கை, சுகவாழ்வு, இரத்த வங்கி, ஏ.ஆர்.டி மையம், தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபர்களும் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!