Yesterday’s petition: Today is fulfilled! 3 wheeler was distributed by District Collector Shantha
பெரம்பலூர் : வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள வே.சாந்தா பணியேற்றபிறகு முதன்முறையாக நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர், அகரம் சீகூரைச் சேர்ந்த இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி நல்லதம்பி என்பவர் தனக்கு மூன்று சக்கர வாகனம் வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

அவரின் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் புதுவாழ்வுத்திட்ட வறுமை ஒழிப்புச்சங்கத்தின் மூலம் உடனடியாக மூன்று சக்கர வாகனம் வழங்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் புது வாழ்வுத் திட்டத்தின் மூலம் ரூ.6,400 மதிப்பிலான புதிய மூன்று சக்கர வாகனம் வரவழைக்கப்பட்டது.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, பயனாளி நல்லதம்பி என்பவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது புதுவாழ்வுத்திட்ட மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!