Yoga Day Celebration at CBSE School of Almighty Vidyalaya
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி முதல்வர் சிவகாமி முன்னிலை வகித்தார். யோகா ஆசிரியர் மகாலட்சுமி மற்றும் பயிற்றுநர் ஆனந்தி ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்து பேசும்போது ஐந்து ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில் சர்வேதச யோகா தினமாக ஐ.நா சபையே ஜீன் 21 உலக யோகா தினமாக கொண்டாடவும் மனித குலத்திற்கே மருந்தில்லா மருத்துவ பயிற்சி என அறிவித்துள்ளது.
தினம் 5 நிமிடம் செய்வதாலேயே இது உங்கள் வாழ்வை மாற்றவல்லது. ஆரோக்கியம், ஆனந்தம், அன்பு வெளி உலக வெற்றி, உங்கள் தேவை இதில் எதுவாக இருந்தாலும் மேம்படுத்துகிறது.
இப்போது தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் யோகாவை விழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் நம் முன்னோர்கள் செய்து வந்த யோகாசனம் உடற்கூறு விஞ்ஞான கலை என்று ஏற்றுக்கொண்டுள்ளது.
உலகத்தில் மனிதனாக பிறந்த அனைவருமே ஜாதி, மதம், மொழி, இனம் கடந்த இனிய மார்க்கமாகவே யோகாசனத்தை ஏற்றுக் கொண்டுள்ளது எனவே பள்ளி மாணவ மாணவிகள் தினமும் யோகா பயிற்சியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.