called for Youth capacity building and training institutions
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் தமிழ்நாடு திறன் வளர்ப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட (Empanel) நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட வேண்டுமென தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் மேற்கண்டவாறு பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, பயிற்சி அளிக்க பதிவு செய்ய விரும்பும் நிறுவனங்கள் தங்களைப் பற்றிய முழு விவரத்துடன் கூடிய கருத்துருக்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்டம் அலுவலகத்தில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கலாம் எனவும், மேற்படி கருத்துருக்கள் மாவட்ட குழுவின் மூலம் தமிழ்நாடு திறன் வளர்ப்பு மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில், பல்வேறு அரசு துறைத் திட்டங்களில் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாடு திறன் வளர்ப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் பதிவு செய்திட தங்கள் கருத்துருக்களை சமர்ப்பிக்கலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.