Youth killed in private school bus collided near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சி தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 27). கல் உடைக்கும் தொழிலாளி. இவர் நேற்றிரவு சைக்கிளில் தண்ணீர் எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த தனியார் பள்ளி பேருந்து மோதியது.
அங்கிருந்தவர்கள் சாமிதுரையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.