resultsஇது குறித்து கேந்திர வித்தியாலயா பள்ளி முதல்வர் ரெங்கசாமி தெரிவித்துள்ளதாவது :

நடைபெற்றுமுடிந்த 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளியில் பயின்ற 22 மாணவா;களும், 18 மாணவிகளும் என மொத்தம் 40 மாணவ, மாணவிகள் தோ;வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

500க்கு500 மதிப்பெண்கள் :

இதில் ஹர;சின், பிரேமா, சாவித்திரி, சர்ளின், அகிலன், முகமதுஜாவித் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் அனைத்துப்பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று 500 க்கு 500 பெற்றுள்ளனர்.

மேலும் 3 மாணவ, மாணவிகள் 490 மதிப்பெண்களுக்கு மேலும், 4 மாணவ, மாணவிகள் 480 க்கும் மேற்ப்பட்ட மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100க்கு 100 மதிப்பெண்கள் :

இதில் மொழி பாடங்களான ஹிந்தி பாடத்தில் 6 நபர்களும், சமஸ்கிருதம் பாடத்தில் 2 நபர்களும், ஆங்கில பாடத்தில் 17 நபர்களும், கணிதத்தில் 15 நபர்களும், அறிவியல் பாடத்தில் 13 நபர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 10 நபர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில்; 2015-16 கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, பொதுதேர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!