மேல்நிலை ஜுன், ஜுலை சிறப்பு துணைத் தேர்விற்கு (2016) தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி தேர்வாளர்கள் மற்றும் தனித் தேர்வாளர்கள் ஆன்-லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம் – முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி தகவல்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த மார்ச் – ஏப்ரல்- 2016ல் தேர்வில் தோல்வியுற்றவர்கள் வருகை புரியாதவர்களுக்கு வருகிற 22.06.2016 அன்று தேர்வுகள் தொடங்கி 04.07.2016 வரை நடைபெற உள்ளது.
இத் தேர்விற்கு தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி தேர்வார்கள் தேர்வு எழுதிய பள்ளிகள் மூலம் தனித் தேர்வர்கள் தேர்வு எழதிய தேர்வு மையத்தில் ஆன்-லைனில் மூலம் 24.05.2016 முதல் 27.05.2016 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
தனியார் பிரவுசிங்க சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் எச் வகை தனித் தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.50 (இதர கட்டணம் ரூ.35- மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-யும் சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.