பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் தர்மராஜ் (வயது56). இவர் பெரம்பலூர் ஆயுதப்படை போலீசில் உதவி ஆய்வாளராக ணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று பணிக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். இன்று காலை தாமஸ் தர்மராஜ் தூங்கி எழுந்து வேலைக்கு புறப்பட்டார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக உறவினர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே தாமஸ் தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த தாமஸ் தர்மராஜிக்கு ஒரு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்