பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடியை சேர்ந்தவர் சுப்பையா மகன் ராஜா (30). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.
நேற்று மாலை 5 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த 4 வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை ஊர் ஒதுக்குப்புறமாக அழைத்து சென்று ராஜா பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமி தாயார் சுசீலா விடம் கூறியுள்ளார். இதையடுத்து ஊர் பொதுமக்கள் ராஜாவை பிடித்து தர்மஅடி கொடுத்து கட்டிவைத்தனர்.
இது குறித்து தாயார் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் சிறுமி பலாத்காரம் செய்த ராஜாவை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
10 வயது பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.