Perambalur: Private candidates can apply for the National Trade Certificate!

2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் புதுடெல்லி இந்திய பயிற்சித்துறை இயக்குனரகத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித் தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு கட்டணத்தை (ரூ.200/- மட்டும்) www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக e-Challan மூலம் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதல்நிலைத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 26.11.2026 அன்று நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வு 27.11.2026 அன்று நடைபெறும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இன்று முதல் வரும் 09.10.2026 வரை விண்ணப்பிக்கலாம். பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. தகுதி வாய்ந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தொழிற் சான்றிதழ் பெற்று முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497