Perambalur: Applications invited for Diwali firecracker shop licenses; Collector announces.

வருகிற 08.11.2026 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வெடிபொருள் விதிகள் 2008-இன் கீழ் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 ச.மீ முதல் 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக்கும் புல வரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப்புறத் தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டு காட்டும் புல வரைபடம். உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் சொத்துவரி செலுத்திய ரசீது நகல். வாடகை கட்டிடம் எனில், உரிமையாளர் சொத்து வரி செலுத்திய அசல் இரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.100/-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம். உரிமத்திற்கான கட்டணம் ரூ.600/- (Head Of Acct Code: 007060800AT22709) அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலுத்து சீட்டு . மனுதாரரின் மார்பளவு பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படம், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் கார்டு / குடும்ப அட்டை / வாக்காளர் அடையாள அட்டை) ஆகிய ஆவனங்களுடன் இசேவை மையங்களின் மூலமாக https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் 18.10.2026 –க்குள் வெடிபொருள் விதிகள் 2008- இன் வழி முறைகளை கடைபிடித்து விண்ணப்பிக்க வேண்டும்.

18.10.2026 க்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும், வெடிபொருள் விதிகள்2008-இன் நிபந்தனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!