Perambalur: Perunthalaivar Kamarajar Breakfast Scheme to be expanded tomorrow!

பெரம்பலுார் நகராட்சிக்கு உட்பட்ட முத்து நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் துறைமங்கலம் டி.இ.எல்.சி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, இன்று காலை கலெக்டர் ப.அப்துல் ராசிக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ் நாடு முதலமைச்சர் நாளை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் மேலும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விரிவு படுத்துவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து மாணவர்களுக்கு தரமான கற்றலை வழங்கவேண்டும் என சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இத்திட்டம் விரிவு படுத்துவதன் மூலம் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 1298 மாணவர்கள் பயணடைவார்கள். இதில், நகராட்சி ஆணையர் லீமா சைமன், உதவி பொறியாளர் சரவணன், பெரம்பலுார் வட்டாட்சியர் கி.பழனிச் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497