Perambalur: Chief Minister’s Trophy competitions; the Collector and MLA presented prizes to the winning athletes.

பெரம்பலூரில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மாவட்ட உள் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பொது பிரிவினருக்கான போட்டிகளை கலெக்டர் ப.அப்துல் ராசிக், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளி மற்றும் மாற்றுதிறனாளிகள் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்/ வீராங்கனைகளுக்கு பரிசுகளையும் வழங்கினர்.

பள்ளி பிரிவில் வெற்றி பெற்ற 882 மாணவ, மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வெற்றி பெற்ற 348 வீரர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.3,000, இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.2,000, மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.1,000 பரிசு அவர்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படவுள்ளது. இதில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் ரா.பொற்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விளையாட்டு, வீரர்கள், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!