Perambalur: Special grievance redressal meeting for persons with disabilities!

பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தனது (கலெக்டர்) தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வரும் 24.09.2026 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன் பெறலாம் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497