Perambalur: Government bus on a new route to Trichy!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள கூத்தனூர் ஊராட்சியில் கலெக்டர் ப.அப்துல் ராசிக், பெரம்பலூர் எம்.எல்.ஏ சிவக்குமார் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூர் கிளையிலிருந்து 529 சி என்ற வழித்தடத்தில் தினசரி காலை 09.00 மணிக்கு பாடாலூரிலிருந்து கூத்தனூர் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரையிலும், மதியம் 2.40 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெரகம்பி, மண்ணச்சநல்லூர், கூத்தனூர் வழியாக பாடாலூர் வரையிலும் ஒரு அரசு புறநகர் பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்த 2 நடையிலும் கூத்தனூர் பொதுமக்கள் பேருந்து வசதி பெறும் வகையில் இன்று முதல் புதிய வழித்தடஇயக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தவெக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!