Perambalur: Van overturns while heading to a baby shower; 5 injured!

பெரம்பலூர் அருகே வளைகாப்பிற்கு சென்ற வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் அருகே உள்ள அருமடல் கிராமத்தை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 15 பேர் வேன் ஒன்றில் கே.புதூர் கிராமத்தில் நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றனர். வேன் அருமடல் அருகே இடுகாடு சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த அருமடல் மேற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வளர்மதி (47), இடது தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டது. செந்தில் மனைவி காவேரி (30) என்பவருக்கு இடது கையில் உள் காயமும், கருப்பையா மனைவி ராதா (39), மற்றும் இவரது மகள் சன்விகா (10) ஆகிய இருவருக்கும் இடது கையில் உள் காயமும், ராமகிருஷ்ணன் சாந்தி(55) என்பவருக்கு இடுப்பில் உள் காயமும் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!