Perambalur: 203 kg of government-banned Gutkha seized; youth arrested!

பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் இருந்த மூட்டையில் குட்கா இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் பாடாலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டம் சாந்து சாந்து பகுதியை சேர்ந்த ஹமீர் சிங் மகன் சேர் சிங் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 203 குட்காவையும் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அனுப்பினர்.









kaalaimalar2@gmail.com |
9003770497