Perambalur: VCK ‘Ilanchiruthai Ezhuchi Pasarai’ District Secretary removed!

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி விசிக மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் கரு. அய்யம்பெருமாள் என்பவர் தொடர்ந்து விசிக கட்சிக்குள் ஆதாயத்திற்காக கோஷ்டிகளை உருவாக்கி பொறுப்பாளர்களிடையே மோதலை உருவாக்கியும், அதோடு மாற்று கட்சியினரிடம் விசிக குறித்து தவறுதலாகவும் பேசி வருகிறார். தொடர்ந்து கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாலும், பொதுமக்களிடையே களங்கம் ஏற்படுத்தி வருவதாலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து 3 மாத காலம் தற்காலிகமாக அவருடைய பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார் எனவும், விசிக கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் கட்சி சம்மந்தமான எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!