Perambalur: Road blockade with empty pots demanding drinking water supply!

பெரம்பலூர் அருகே கடந்த 4 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறி அரசலூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூர் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து இன்று காலை பெரம்பலூர் அரசலூர் சாலையில் காலி குடஙகளுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்துகளையும் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை போலீசார் சீர் செய்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!