Perambalur: Temporary staff nurse vacancies in government hospitals; Collector announces!

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள தற்காலிக செவிலியர் (Staff Nurse) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. DGNM (Diploma in General Nursing and Midwifery) அல்லது B.Sc. Nursing கல்வித் தகுதி பெற்றவர்களும், தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் மன்றத்தில் பதிவு செய்தவர்களும், 12.09.2026 அன்று 50 வயதிற்குள் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.21,000/- தொகுப்பூதியம் வழங்கப்படும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான perambalur.nic.in மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது Speed Post / Registered Post மூலமாகவோ 25.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS), மாவட்ட சுகாதார அலுவலகம், (பழைய அரசு கண் மருத்துவமனை வளாகம்), துறைமங்கலம், பெரம்பலூர் – 621 220 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் பெறப்படும் விண்ணபங்கள் மட்டுமே ஏற்று கொள்ள படும். பழைய விண்ணபங்கள் ஏற்றுக் கொள்ள படமாட்டாது இதற்கான விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497