Perambalur: Extension of government bus service to Orangur and Korakkavadi villages!

பெரம்பலூர் மாவட்டம், காரியானூர் ஊராட்சியில் கலெக்டர் ப.அப்துல் ராசிக் மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ கே. சிவக்குமார் ஆகியோர் புதிய வழித்தடத்தில் புறநகர் பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூர் கிளையிலிருந்து தினசரி 613ஜி என்ற வழித்தடத்தில் காலை 5.45 மணிக்கு பெரம்பலூரிலிருந்து கை.களத்தூர், வெள்ளுவாடி, சோலை நகர் வழியாக ஒரங்கூர் வரையிலும், குன்னம் கிளையிலிருந்து தினந்தோறும் 613ஹெச் என்ற வழித்தடத்தில் மதியம் 2.35 மணிக்கு பெரம்பலூரிலிருந்து கை.களத்தூர், வெள்ளுவாடி, சோலை நகர் வழியாக கொரக்கவாடி வரையிலும் இரண்டு புறநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு நடையிலும் சோலை நகர் பொதுமக்கள் பேருந்து வசதி பெறும் வகையில் இன்று முதல் புதிய வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!