Perambalur: TVK functionaries assaulted a government bus driver after he overtook their motorcycle!
AI PHOTO
பெரம்பலூர் மாவடட்டம் கிளியூர் பெருமத்தூர் கிராமத்தில் இருந்து அரசு டவுன் பஸ் (1F) ஒன்று பெரம்பலூரை நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. மங்களமேடு அருகே வந்த போது, பஸ்சின் முன்பு போதையில் பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் , பஸ்சுக்கு வழி விடாமல் வளைந்து நெளிந்து சென்றனர். பஸ் டிரைவர் ஹாரன் அடித்து பைக்கை முந்தி சென்றார். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தங்களது பைக்கை முந்தி சென்ற அரசு பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டி வந்தும் தேவையூர் அருகே பஸ்சை வழிமறித்தனர். பின்னர் டிரைவரை கீழே இறக்கி பயணிகள் முன்பு தாக்கினர். பயணிகள் இதனை வீடியோவாக பதிவு செய்தனர்.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களமேடு போலீசார் போதையில் இருந்த தேவையூர் தவெக கிளை நிர்வாகிகளான சதீஷ், சரவணன் ஜெகதீஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்தாக்குதலுக்கு உள்ளான டிரைவர் மோகன் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த சம்பவத்தால் அரசு பஸ்சில் பயணித்த 50க்கும் மேற்பட்டோர் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து மற்றொரு பேருந்தில் ஊருக்கு சென்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது