Perambalur: Nutrition Month celebration; Collector inaugurates signature campaign and visits exhibition!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் ப.அப்துல் ராசிக் பார்வையிட்டார்.

செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டும் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் நமது அங்கன்வாடி நமது பொறுப்பு என்ற தலைப்பை மையமாக கொண்டு ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மாதம் முழுவதும் உணவு வகைகளின் பன்முகத்தன்மை மற்றும் போதுமான புரதச்சத்து ,அங்கன்வாடி மையங்களில் சூடான சமைத்த உணவு, சமூக பங்கேற்பு சமூகத்தின் உரிமை மற்றும் பொறுப்புணர்வு, குழந்தை வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பகால தூண்டுதல் பயிற்சி, பிரதான் மந்திரி மாத்ரு வந்தன யோஜனா தாய்மை நலனுக்கான பணப்பரிமாற்றம் ஆகிய கருத்துக்களை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று கேழ்வரகு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு, சோளம், சத்து மாவு, சிவப்புச் சோளம், கம்பு போன்ற சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. காய்கறிகள் மற்றும் பழங்களினால் செய்யப்பட்ட கார்விங் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. முன்னதாக, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!