Perambalur: Morning breakfast scheme expanded to government schools up to Class 8!

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தமிழ்நாடு முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை சென்னை காந்தி கிராமம் நடுநிலைப் பள்ளியிலிருந்து இன்று காலை தொடங்கி வைத்தார். இதனையொட்டி பெரம்பலுர் மாவட்டம், பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் அப்துல் ராசிக், எம்.எல்.ஏ சிவக்குமார் ஆகியோர் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். இத்திட்டத்தின் கீழ் 160 ஊராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 11,910 மாணவர்களும், 7 நகர பள்ளிகளைச் சேர்ந்த 1,298 மாணவர்கள் என மொத்தம் 167 பள்ளிகளைச் சேர்ந்த 13,208 மாணவ, மாணவியர்கள் பயன்பெறவுள்ளனர். அரசு அலுவலர்கள், தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497