Perambalur: Small-scale private sector job fair; Collector announces!

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள வேலை நாடுநர்களும், மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 25.09.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வித் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால் இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் தவறாது தங்களது கல்வித் தகுதி மற்றும் சுயவிவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்ய வேண்டும். வேலையளிப்பவர்கள் தங்களது நிறுவன காலி பணியிட விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே, இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார் துறை நிறுவனங்களும் வருகின்ற 25.09.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00-மணி முதல் 2.00 மணி வரை வேப்பந்தட்டை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை நாடுநர்கள் குறிப்பாக வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04328-296352 மற்றும் 9499055913 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!