பெரம்பலூரில் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் பழுது அடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர் ஒன்றியக்குழுகூட்டம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுதலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி, லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்றப்படவேண்டிய அடிப்படை வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினர். சேர்மன் ஜெயக்குமார் பேசுகையில், கவுன்சிலர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் ஆணையரும், கவுன்சிலர்களும் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தமிழகம் முழுவதும் தொடந்து பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக மக்களுக்கு ஏறுபட்ட இடர்பாடுகளை போர்கால அடைபடையில் நிவர்த்தி செய்தும், இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்களுக்கு உறுதுணையாகவும், இருந்து மீண்டு எழுவதற்கு உதவி செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழுது அடைந்த ஊராட்சி ஒன்றிய, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை இடித்து புதிய பள்ளி கட்டிடங்களை கட்டுவது உள்பட 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஜானகி, கருணாநிதி, கைலாயி, சேகர், ராஜேஸ்வரி, பன்னீர்செல்வம், பச்சையம்மாள், அண்ணாதுரை, தேவகி, செல்வராஜ், பால்ராஜ், புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர் சதிஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.