விளம்பர நிறுவனத்திடம் வாங்கிய கடன் பாக்கியை திருப்பி செலுத்தாத வழக்கில், லதா ரஜினிகாந்த் விசாரணை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. 2014 ஆம் ஆண்டு ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படத்திற்காக பெங்களூரை சேர்ந்த விளம்பர நிறுவனத்திடம், லதா ரஜினிகாந்தை இயக்குனராக கொண்ட மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 10 கோடி ரூபாய் கடன் வாங்கியது. அதில் 6 கோடியே 20 லட்சம் ரூபாயை திருப்பி தரவில்லை என்று கூறி லதா ரஜினிகாந்திற்கு எதிராக அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில், ஏற்கனவே உத்தரவிட்டபடி கடன் பாக்கியை 3 மாதத்திற்குள் வழங்காததால் உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாக்கித் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால் விசாரணையை எதிர்கொள்ள லதாரஜினிகாந்த் தயாராக இருக்குமாறு தெரிவித்துள்ளனர்