பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள அறிவிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் மதுகூடங்கள் ஆகியவற்றிக்கு 24.01.16 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் இராமலிங்க அடிகளார் நினைவு நாள் மற்றும் ஜன.26 (செவ்வாய்கிழமை) அன்று குடியரசு தினம் அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.