20150706021231

பெரம்பலூர் : அரசுப்பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசுப்பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று ஜப்தி செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கோவிந்தராஜாபட்டினம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ந் தேதிசமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவு 1 மணியளவில் கோவிந்தராஜாபட்டினத்திற்கு அவரது உறவினரான தங்கவேல் என்பவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே டி.கே.அகரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த அரசுப்பேருந்து டூவீலர் மீது மோதியது. இந்த சாலை விபத்தில், தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தார். சக்திவேலுக்கு தொடைப் பகுதியில் கால் முறிவு ஏற்பட்டது.

இதனால் அவர் இழப்பீடு கோரி பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி விபத்திற்கு காரணமான அரசுப்போக்குவரத்துகழகம் 1 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் சக்திவேலுவுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் இழப்பீடு தொகையை இதுநாள் வரை அரசுப்போக்குவரத்து கழகம் சக்திவேலுவுக்கு வழங்கவில்லை.

இதனைத்தொடர்ந்து சக்திவேல் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 13ந்தேதி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுமீதான விசாரணை இதுநாள் வரை நடைபெற்று வந்தது. இந்நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட சக்திவேலுவுக்கு இழப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து 2 லட்சத்து 82 ஆயிரத்து 242 வசூல் செய்திட நீதிபதி டி.எஸ்., நந்தகுமார் சம்மந்தப்பட்ட டெப்போவிற்கு சொந்தமான அரசுப்பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி 50க்கும் மேற்ப்பட் பயணிகளுடன் வந்த
அரசுப்பேருந்தை கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

இதனால் பேருந்தில் பயணம் செய்த 50க்கும் மேற்ப்பட்ட பயணிகள் அவர்களின் உடமைகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டனர்.

பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட பயணிகளுக்கு மாற்று பேருந்து வசதி ஏற்பாடு செய்து தராததால், 2 நேரத்திற்கு மேலாக பரிதவிப்போடு கொழுத்தும் வெயிலில் காத்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!