
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், 51வது நாள் கோ மாதா பூஜை நிறைவு நாள் விழா, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் அன்னைசித்தர். ராஜ்குமார் குருஜி தலைமையில் நடைபெற்றது.
உலக மக்கள் நலன் கருதியும், முறையான மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கவும், செப்.13 தேதி துவங்கிய பூஜை நவ.2 (இன்று) வரை 51 தொடர்ந்து இன்று வரை கோ மாதா பூஜை நடந்தப்பட்டது.
51 வது நாளான இன்று, 108 லட்சுமி போற்றி கோமாதா பூஜை, 210 சித்தர்கள் யாகம் நடத்தப்பட்டது. சாதுக்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம், காசு தானம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அன்னதான நிகழச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள், ராஜாசிதம்பரம், நவீதாலட்சுமி, சிங்கப்பூர் குருக்கடாட்சம் நண்பர்கள், நடராஜா பாபா மற்றும் இந்திய ஆன்மிக அன்பர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மகாசித்தர்கள் அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்து இருந்தது.
அன்னதானம், மற்றும் நன்கொடை வழங்க அல்லது தான தர்மம் அளிக்க விரும்புவர்கள் +91 8870994533 என்ற எண்ணிலும் www.mahasiddhargaltrust.org
யிலும் தொடர்பு கொள்ளலாம் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.











kaalaimalar2@gmail.com |
9003770497