Ariyalur: Expansion of breakfast scheme for government-aided schools: Minister Sivashankar inaugurated it!
அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று காலை தொடங்கி வைத்தார். இதனையொட்டி அரியலூரில், அரசு உதவி பெறும் தூய மேரி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, அரியலூர் கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுக கட்சியினர் உடனிருந்தனர்.