Badminton tournament on behalf of Rally Sports Academy in Tondi 

தொண்டி ராலி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தொண்டியில் இறகு பந்து  விளையாட்டு போட்டி நடைபெற்றது. 

ரெயின்போ ஹிப்பத்துல்லா, ரஹ்மத்துல்லா ஆகியோர் தலைமையில் பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. ஓப்பன் பிரிவில் சாதிக்பாட்சா ராஜ் முதல் பரிசும் பைசல் பயாஸ் இரண்டாம் பரிசும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் ஷாபின் முதல் பரிசும் ரிழன் இரண்டாம் பரிசு பெற்றனர்.

15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பர்வேஸ் முதல் பரிசும் அல் அமின் இரண்டாம் இடம் பரிசும் பெற்றனர்.13 வயது பிரிவில் ரய்ஹான் .முதல் பரிசும் லியாகத் இரண்டாம் பரிசும், 10 வயது பிரிவில் இப்ராஹிம் முதல் பரிசும் ஷாஜீர் இரண்டாம் பரிசும் பெற்றனர்.

சிறப்பு அளிப்பாளர்கள் நூருல்லா, அப்துல் கரிம், லியாக்கத், சாதிக்பாட்சா, ஹமிது பாய், அஸ்ரப் பைசல், கண்ணன், காமாராஜ், ஜிப்ரிக் குதுப், பெரியசாமி, சலிம் கான், பயாஸ் குனா, ஆசிக் கல்யாண் ஹரி, முபாரிஸ், ராஜ் சேகர், தேவா சதிஷ், இப்ராஹிம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!