Congress State women wing Jansirani has invited women to contest in the local elections

உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகமாக போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கக்ஷட்டம் மாவட்ட மகளிரணி தலைவி சகுந்தலா தலைமையில் நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

போக்குவரத்து ஊழியர்களின் உரிய கோரிக்கையை அரசு நிறைவேற்றாமல் அவர்களை மிரட்டுவதும், எம்எல்ஏ. பஸ் ஓட்டுகிறார் என சொல்லி கொண்டும் இருப்பது சரியல்ல. எம்எல்ஏ என்றால் அவர் எம்எல்ஏ பணியை பாருங்கள் டிரைவராக வேண்டும் என்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு முறைப்படி டிரைவர் பணிக்கு வந்துவிடுங்கள், கன்னியாகுமரியில் கடும் மழையால் விவசாயிகளும், மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசும் மாநில அரசும் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் 50 சதவீதத்திற்கும் மேல் போட்டியிட வேண்டும். பெண்கள் நிர்வாகத்தில் பங்கேற்க தாமாக முன்வரவேண்டும், என அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயக்குமாரி, முன்னாள் மாவட்ட தலைவர் விக்டர், மாவட்ட துணை தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாரிராஜன், முன்னாள் நகர் தலைவர் முத்துராமலிங்கம், நிஜாம்அலிகான், மாவட்ட இலக்கிய அணி முருகேசன், வட்டார தலைவர் விஜயருபன், கோபால், முருகன், செய்தி தொடர்பாளர் கவுசிமகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

நகர தலைவர் கோபி நன்றி தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!