Employees of the electrical power connection of the bribe to the name change, the 5-year prison: 2 thousand fines: Court Taxation
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம், செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் பாலசுப்பிரமணியம் இவர் கடந்த 2004 ம் ஆண்டு தனது தந்தையின் பெயரில் இருந்த விவசாய மின் இணைப்புகள் 2, மற்றும் கோழிப்பண்ணைக்கான ஒரு மின் இணைப்பிற்கும் தனது பெயரில் மாற்றம் செய்து தரக்கோரி காங்கேயம் மின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட மின் வாரிய பணியாளர் செல்வராஜ் ( தற்போதை வயது 65) என்பவர் 3 ஆயிரம் ருபாய் லஞ்சம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தருவதாக பாலசுப்பிரமணியத்திடம் கட்டாயப்படுத்தியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளாத பாலசுப்பிரமணியம் கடந்த 8.3.2004 அன்று ஈரோடு விஜிலென்ஸில் புகார் தெரிவித்தார் இதனைத்தொடர்ந்து 9.3.2004ம் அன்று செல்வராஜ் பாலசுப்பிரமணியத்திடமிருந்து லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து செல்வராஜை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து மின்வாரியம் உத்தவிட்டிருந்தது இது தொடர்பான வழக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதன் இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகனாதன் ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 7ன் படி இரண்டாண்டுகள் சிறை தண்டனையும், பிரிவு 13(2)ன் படி 5 ஆண்டு சிறை தண்டனையும் 2ஆயிரம் அபராதமும், அதைக்கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார் இதனைத் தொடர்ந்து செல்வராஜை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்