Human chain protest on behalf of BJP condemning Tamil Nadu government in Ramanathapuramராமநாதபுரத்தில் பா.ஜ., சார்பில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.,ஒபிசி அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அரண்மனையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் பா.ஜ ஒபிசி அணியின் மாவட்ட தலைவர் மாரிமுத்து அமைப்பு சாரா அணியின் தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் நாகராஜன், மாநில இளைஞரணி பொது செயலாளர் ஆத்மா கார்த்திக், மாநில செயலாளர் சண்முகராஜா, தொழிலாளர் நல மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொது செயலாளர் குமார், குமரன், நகர் பொறுப்பாளர் பரமேஸ்வரன், நவநீதன், வழக்கறிஞர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.