In Perambalur, the BJP campaign determined the victory of the opposition; Alliance parties in confusion!

பெரம்பலூரில், நேற்று மாலை வானொலித் திடலில் பிஜேபியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்ட தமிழகம் நிமிர தமிழனின் பயணம் என்ற பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது. பிஜேபி-யினரை விட அதிகளவு அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர், எதிர்கட்சிகள் நிலையையும், அவர்களின் குறைகளையும் பேசியும், வீடியோ படமாகவும் காண்பித்தார். ஆனால், அவர் பேசியது கமாண்டிங் தனமாக இல்லாமல் மென்மையாக பேசினார். இது மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தும் வகையிலோ, வாக்குகளாக மாற்றும் வகையிலோ அமையவில்லை. அவர் குற்றம் சாட்டிய அனைத்தும் ஒரு வகையில் அது பழையது, மற்றொரு வகையில் அது ஊடகங்களில் வெளியானவையாக இருந்தன.
ஒரு எதிர்க் தலைவர், ஆளும் கட்சியினரின் ஊழலை தோலுரித்து காட்ட வேண்டும். அது நடக்கவில்லை. எதிர்கட்சிகளை விட தற்போது ஊடகங்களே அதிகளவில் எதிர்க் கட்சிகளாக செயல்பட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுகாட்டி வருகின்றன. பாஜகவில் ஹெச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் பேசியது கூட பல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை விட பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் அனுபவ ரீதியாகவும், சாதூரியமாகவும், கையாண்டு, பக்குவமாக காயை நகர்த்துவார்கள். உதாரணமாக சில வருடங்களுக்கு முன்பு விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் கல்வி நிறுவனங்களில் வசூலித்த பிரமுகர் ஒருவர் மிச்சம் இருந்த ரூ. 5லட்சத்தை வைத்துக் கொள்ள முயன்றார். இதை அறிந்த பொன்.ராதாகிருஷ்ணன் அவரிடம் கூட்ட பந்தல் செலவு 10 லட்சம் பாக்கி உள்ளதை கொடுத்துவிட சொன்னர். அந்த பிரமுகர் சத்தமில்லாமல் மொத்தத்தையும் கொடுத்து விட்டு வெளியே வந்தார். இதுதான் அரசியல்வாதியின் சாணக்கிய திறமை.
ஆனால், கூட்டம் தொடங்க மணிக்கணக்கில் தாமமானதால், கூட்டத்திற்கு ஆட்டோவில் வந்தவர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே வீடுகளுக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
மேலும், அனுபவம் குறைந்த தலைவர்களால் இன்னும் ஒரு மெச்சுரிட்டியான வெற்றியை அடைய முடியவில்லை. கடந்த எம்.பி தேர்தலில் வெற்றி பெற வேண்டிய பாஜக வேட்பாளர் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் தோல்வியை தழுவினார். வயதான காலத்திலும், தீவிர பிரச்சாரம் செய்ததோடு, செலவுகளையும் செய்தார். பட்டுவாடாவில் தொய்வு ஏற்பட்டது. ஆனால், திமுகவினர் இரவோடு இரவாக கனகச்சிதமாக பணப்பட்டுவாடா செய்து முடித்தனர். அதிமுக பட்டுவாடா செய்யாமல் யானை பலத்துடன் 2ம் இடத்தை பிடித்தது. செலவு செய்து பட்டுவாடா செய்திருந்தால் அதிமுக வெற்றி வாகை சூடியிருக்கும். ஆனால், அந்த சூழலில் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லாததால் அக்கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெல்லை கண்ணனை பெரம்பலூரில் தாக்கிய பாஜகவினர் கூண்டோடு அதிமுகவிற்கு மாறிவிட்டனர். இதற்கு கட்சி சில நிர்வாகிகள் கட்சியினரையே மட்டம் தட்டி ஓரம் கட்டி, முறையான அங்கீகாரம் வழங்காததால் இன்னும் பல பேர் எதுக்கு என்று சைலண்டாக கட்சியை விட்டு விலகி இருக்கும் நிலையில், காங்கிரசுக்கு போட்டியாக தொண்டர்களே இல்லாத நிர்வாகிகள் மட்டுமே உள்ள கட்சியாக பிஜேபி பெரம்பலூரில் மாறி வருகிறது. இது போன்ற பல சம்பவங்கள் நடந்தாலும் அக்கட்சியினர் சீரமைப்பு செய்யாமல் மாறாக, அரசியல் அனுபவம் குறைந்த நிர்வாகிகளை கொண்டு இயக்கி வருவது எதிர்க்கட்சிகளுக்கு அல்வா கிடைத்தது போலாகி வருகிறது. வரும் காலத்தில், பிஜேபி சீர் செய்து கொள்ளவில்லை என்றால் அக்கட்சி மீண்டும் தனது பழைய நிலைக்கே செல்லும் வாய்ப்பு உள்ளது.
தற்போதைய அரசியல் அனுபவம் குறைந்த (அப்பரண்டிஸ்) தலைவர்களால், நாடாளுமன்றத்தில் பாரிவேந்தரை எதிர்கொண்டதை போல சட்ட மன்ற தேர்தலிலும் எதிர்கட்சிகள் சைக்கிள் கேப்பில் வெற்றி வாகை சூட வாய்ப்பு உள்ளது. எந்தவொரு கட்சியானாலும் தொழிலதிபர்களுக்கும், பண்ணையார்களுக்கும், மிட்டா மிராசுகளுக்கும், வியாபாரிகளுக்கும் திராவிட கட்சிளைக் போல கவுரவப் பதவி வழங்கி விட்டு, பொது நலனிற்கும், சமூகத்திற்கும், ஊழலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கினால் மட்டுமே அந்த கட்சி வளரும்.!!











kaalaimalar2@gmail.com |
9003770497