Like tomatoes, gold’s price will one day plummet; don’t buy now and lose, let the price come down, let the war end, the public is waiting!
கார்க்காலத்தில் தக்காளி உற்பத்தி குறைவாகும் போது தக்காளி விலை உச்சத்திற்கு செல்வதும், வசந்த காலத்தில், உற்பத்தி அதிகமானவுடன் விலை குறைவதும், உரிய விலை கேட்டு தார்ரோட்டில் கொட்டி செல்லும் நிலையை போல், நாளுக்கு விலை உச்சம் பெற்று வரும் தங்கமும், ஒரு நாள் கடும் விலை வீழ்ச்சி சந்தித்து தீரும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
தற்போது நடந்து வரும் இஸ்ரேல் – காசா போர், மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகவும், டிரப்பின் ஆட்சியில் வரிவிதிப்பின் மாறுதல்களும் தங்கத்தின் விலையை அதிகரிக்க செய்துள்ளதுள்ளன. இன்று தங்கத்தின் கிராம ஒன்றுக்கு ரூ.11070 வரை விற்பகை செய்யப்படுகிறது. கூடுதலாக செய்கூலி, சேதாரம் வரும். இந்த விலை நிரந்தரமானது அல்ல என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். போர் முடிவிற்கும், பின்பும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆட்சிக்கு பிறகும் தங்கம் வீழ்ச்சி அடையும் என கருதுகின்றனர்.
ஷேர் மார்க்கட் போல தங்கத்தின் எழுச்சியும், வீழ்ச்சியை சந்திக்கும். விலை அதிகரிக்க அதிகரிக்க நுகர்வோர்களின் ஆர்வம் குறைகிறது. தங்கமும் செயற்கையான தட்டுப்பாடு அல்லது பதுக்கல் செய்யப்படுகிறாதா? என்ற சந்தேகமும் தங்கத்தின் மீது பொதுமக்களுக்கு வந்துள்ளது. மேலும், இதே நிலை நீடித்தால், தங்கத்தை மக்கள் புறக்கணிக்கப்படும் காலம் வரலாம். தங்கத்தின் விலைக்கு நிகராக வெள்ளியின் விலையும் தற்போது அதிகரித்து வரும் வேளையில், வெள்ளியின் மீது பொதுமக்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் வரும் காலங்களில் தங்கத்திற்கும், பிற பொருட்களை போன்று விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.