Perambalur: Power outage announced at the substation for the city and suburban areas!
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறப்படும் பகுதிகளான பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குபேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், 4 ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி சாலை, சிட்கோ, துறையூர் சாலை, அரணாரை, அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, அருமடல், அருமடல் ரோடு எளம்பலூர் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு 9.06.2025 (திங்கட்கிழமை) காலை 09.45 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும், பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்பட்டுவிடும் என உதவி செயற்பொறியாளர் து. முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.