Namakkal Nachimuthu Polytechnic College Alumni Foundation provided funds of Rs 28 lakh!
நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் மன்ற விழாவில் அறக்கட்டளை நிதியாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை: நாமக்கல் நகராட்சி இன்ஜினியர் கமலநாதன், என்ஐஏ கல்வி நிறுவன தலைவர் டாக்டர் மாணிக்கத்திடம் வழங்கினார்.
நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க விழா
பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் மன்ற விழா நாமக்கல்லில் நடைபெற்றது.
பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி துவக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இக்கல்லூரியின் வைர விழா வருகிற செப்.5 முதல் 8ம் தேதி வரை பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.
இதையொட்டி இக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் மன்றத்தின் கூட்டம் மற்றும் மறைந்த தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் நினைவுச் சொற்பொழிவு நாமக்கல் பிஜிபி கல்லூரியில் நடைபெற்றது.
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மாணிக்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் மன்ற வைர விழாக்குழு தலைவர் பாலசுபிரமணியன் வரவேற்றார். பிஜிபி கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனி பெரியசாமி, பெருந்துறை கொங்குவேளாளர் இன்ஜினியரிங் கல்லூரி அறக்கட்டளை தலைவர் முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்கள்.
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், தொழிலதிபர்கள் கரூர் நாச்சிமுத்து, திருச்செங்கோடு செங்கோடன், சேலம் குழந்தைவேல், சிங்கப்பூர் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் நாமக்கல் பகுதி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் நகராட்சி இன்ஜினியரி“ கமலநாதன் வைர விழா அறக்கட்டளை நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினார். விழாவில் மொத்தம் ரூ.28 லட்சம் அறக்கட்டளை நிதி வழங்கப்பட்டது.
நாமக்கல் டிரினிடி பள்ளி சேர்மன் டாக்டர் குழந்தைவேல், ஆண்டவர் அண்ட் கம்பெனி நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம், எம்எம்ஏ நாமக்கல் மைய தலைவர் கணேசன், கல்லூரி பேராசிரியர் அரசுபரமேஸ்வரன் மற்றும் திரளான முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.