Northeast monsoon: 6 thousand rescue workers, 400 rescue team: Ramanathapuram collector

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடுகளாக 400 வருவாய் கிராமங்களில் 6 ஆயிரத்து 24 முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு 400 முதல்நிலை மீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்க பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் ,டெங்க காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பான மொத்த மழையளவு 827 மி.மீட்டர் ஆகும். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை முலமாக 187.14 மி.மீட்டரும் வடகிழக்கு பருவமழை முலமாக இதுவரை 64.7 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்டத்தில் முன்னேற்பாடு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரம்மாவட்டத்தில் மிதமாக பாதிக்ககூடிய பகுதிகளாக 38 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை கண்டறிய 15 மண்டல அளவிலான குழுக்கள் தாசில்தார்கள் தலைமயில் 135 இதர துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தாலுக்காக்களிலும் வடகிழக்கு பருவமைழ பணிகளை கண்காணிக்க 8 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் பாதிக்கக் கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்க வைக்க 32 நிவாரண மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பாதிக்கப்படும் என கருதப்படும் பகுதிகளை சரிசெய்வதற்கு ஏதுவாக 174 ஜேசிபி, 53 ஜெனரேட்டர் மற்றும் 453 பம்ப் செட்கள் 44 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.

பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான உணவுபொருட்கள் சேமித்து வைக்க 53 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக 80 படகுகள் மற்றும் 316 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தொற்று நோய் கண்காணிப்பு பணியில் தேவையான மருத்துவக்குழுவினர் மண்டல அளவில் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். தேவையான மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் இருக்கும் குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்கள் ஆகியோர்களுக்கு தனிக்கவனம் செலுத்தவும், தேவைப்பட்டால் இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகளில் வாழும் கால்நடைகளுக்கு தேவையான தீவனம், மருந்துப்பொருட்கள் மற்றும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு ஐந்து தாலுகாக்களில் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்களில் 6 ஆயிரத்து 24 முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு 400 முதல்நிலை மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்குவால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதர வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 39 நபர்களுக்கும் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகளில் உள்நேயாளிகளாக அனுமதிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் ரத்த திட்டு அனுக்கள் பிரிக்கும் இயந்திரம் முலம் நாள் ஒன்றுக்கு 48 யுனிட் ரத்த திட்ட அனுக்கள் பிரிக்கப்பட்டு தேவைப்படும் நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 600 யுனிட்டும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 225 யுக்ஷனிட்டும் ரத்தம் சேமிக்கும் வசதி உள்ளது.

அரசு தலைம மஸ்ரீருத்துவுமனை அனைத்து தாலுகா அரசு மருத்துவனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த திட்ட அனுக்கள் மதிக்கப்படும் இயந்திரம் 30 நிருவப்பட்டு அதன் முலம் காய்ச்சல் உள்ள நோயாளிகளின் ரத்த திட்ட அனுக்களின் எண்ணிக்கையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிறமாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் முலமான பாதிப்பு பரவலாக உள்ளநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு தொடர் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

டெங்கு கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 7 பேருராட்சிகள் உட்பட்ட அனைத்து வார்டுகள் மற்றும் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்திற்குட்பட்ட 2 ஆயிரத்து 306 உட்கடை கிராமங்களில் முதற்கட்ட துாய்மை பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதுடன் வீடுவீடாக லார்வாக்கள் கண்டறிந்து அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இரண்டாவது கட்ட பணியாக கடந்த 6 மாத காலத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர வைரஸ்கள் முலமாக காய்ச்சல் உள்ளதாக கண்டறியப்பட்ட இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் தொடர்ச்சியாக துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவ்விடங்களில் முறையான கால இடைவெளிகளில் புகை மருந்துூ அடிக்கப்பட்டு வருகிறது.

முன்றாவது கட்ட பணியாக கடந்த இருமாதங்களில் டெங்கு காய்ச்சல் உள்ளதாக கண்டறியப்பட்ட கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளை சேர்ந்த வார்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தி தொடர்ச்சியாக கொசு ஒழிப்பு மற்றும் கொசு முட்டைகள் அழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் குடிநீர் வினிேயாக தொட்டிகளை ஒேர நேரத்தில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார பணியாளர்கள், 140 செவியலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நான்காவது கட்ட பணியாக 100 வீட்டிற்கு ஒரு நபர் என்ற விகிதத்தில் மகாத்மா கா்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களிலிருந்து நடுத்தர வயதுடைய தன்னார்வமுள்ள 3 ஆயிரத்து 640 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு லார்வாக்கள் வளரம் பலதரப்பட்ட அமைப்புகளை கண்டறிந்து அழித்தல் மற்றும் அவை உருவாக வாய்ப்புள்ள துாய தண்ணீர் தேங்கிடக்கக்ஷடிய பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 100 வீடுகள் வீதம் ஒதுக்கி கொடுக்கப்பட உள்ளது. இவர்கள் நாள்தோறும் இப்பணியில் ஈடுபடுவர்.

இவர்கள் தவிர வழக்கமாக இப்பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரத்து 63 ஊராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆயிரத்து 816 துாய்மை காவலர்களும் நாள்தோறும் இப்பணியை செய்து வருவர்.

மாவட்ட அளவில் இப்பணிகளை கண்காணிக்க அனைத்து துறை அலுவலர்களையும் உள்ளடக்கி உட்கடை கிராமங்கள் மற்றும் வார்டுகள் வாரியாக சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வரகிறது. இதன் முலம் டெங்கு மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இறப்பு நடக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் முழு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளது.

பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

மாவட்டத்தில் நவ.1 முதல் 50 மைக்ரான் ்ளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திட முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டி பயன்பாடு குறித்து கண்காணித்து ஆய்வு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவ.15ம் தேதிக்கு பின் 50 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திடு் கடைகள், உணவு விடுதிகள், நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும், என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

டிஆர்ஓ முத்துமாரி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுரு உட்பட பலர் உடன் இருந்தனர்.

– சிவசங்கரன்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!