Perambalur: 16-year-old boy who raped a 5-year-old girl! He was sent to a children’s home!!
பெரம்பலூர் அருகே உள்ள சுற்று வட்டார கிராமத்தில், நேற்றுமுன்தினம் சுமார் 11 மணி அளவில் 5வயது சிறுமி வீட்டின் அருகே உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அதே, பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிடைக்கும் வேலைக்கு சென்றுவந்துள்ளான். இந்நிலையில் 5 வயது சிறுமியை நைசாக விளையாட அழைத்து சென்ற சிறுவன் வீட்டிற்கு அழைத்து கற்பழித்துள்ளான். நண்பகல் 12.30 மணி அளவில் வீட்டைவிட்டு வெளியே வந்த வலிவேதனையுடன் அழுது கொண்டிருந்தாள். மாலை கூலி வேலைக்கு சென்று வந்த பெற்றோர்கள் சிறுமியை குளிப்பாட்டி விட அழைத்து சென்ற போது தனக்கு வலிப்பதாகவும், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர், சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.