Perambalur: A rowdy who tried to escape from the police broke his leg! Other rowdies are shocked!!
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவன் கண்ணன் மகன் பிருத்திகை வாசன்(27).
பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில்
வழக்கு விசாரணைக்கு நீதி மன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து வந்த பிருத்திகைவாசனும்அவனது கூட்டாளியான தொட்டியத்தை சேர்ந்த சுபாஷ் என்பவனும்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வடுகபாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கிருந்த போது பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசாரால் நேற்று மாலை, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்துஅவர்களை பெரம்பலூர் நோக்கி அழைத்து வரும் போது போலீசாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்ற பிருத்திகைவாசனுக்கு கால் முறிவு ஏற்பட்டு, மாவுக்கட்டுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதனிடையே கைது செய்யப்பட்ட ரவுடி கணவன் மார்களின் கை கால்களை முறிக்கவோ அல்லது என்கவுண்டரோ செய்து விடக்கூடாது பாதுகாப்பாக நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்று அவர்களின் மனைவிமார்கள் நேற்று நள்ளிரவு பெம்பலூரில் காவல் நிலையத்தை கைக்குழைந்தையுடன் முற்றுகையிட்டு, தாங்கள் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்று கணவரை விட்டு விடுங்கள் என கண்ணீர் மல்க போலீசாரிடம் கதறிய நிலையில், கைது செய்யப்பட்ட இருவரில் முக்கிய குற்றவாளியான பிருத்திகைவாசனுக்கு போலீசார் மாவு கட்டு போட்டிருப்பது அவர்களின் குடும்பத்தாரையும், அவனது கூட்டாளிகள் உள்ளிட்ட பெரம்பலூர் வாழ் ரவுடிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.