Perambalur: A special meeting of the Ward Sabha was held in Arumbavur Town Panchayat under the chairmanship of Valliammai Ravichandran!

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பேரூராட்சியில், தலைவர் வள்ளியம்மை தலைமையில் வார்டு சபா சிறப்பு கூட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக 5வது வார்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்து தங்கள் குறைகளை தெரிவித்தனர். இதில் இப்பகுதியில் சுமார் 40 வருடங்களாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்கள் அவர்களின் வீட்டு கழிவுநீர் செல்லும் பாதையை தடுத்து நிறுத்த சிலர் முயற்சிப்பதாகவும், அதனால், இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படாமல் இருப்பதற்கு பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும், இப்பகுதியில் காலை நேரங்களில் மாமிச கடைகள் இயங்குவதாலும், மாலை நேரங்களில் சில்லி சிக்கன் போன்ற கடைகளை இயங்குவதாலும், இப்பகுதியில் நாய்கள் தொல்லையும், மாலை நேரங்களில் மதுப்பிரியர்கள் சில்லி சிக்கனை வாங்கிக்கொண்டு அப்பகுதியில் உள்ள காலியாக உள்ள இடங்களில் அமர்ந்து கொண்டு மதுஅருந்துவதோடு, அவ்வழியே வரும் பொது மக்களிடம் வம்பிழுத்து தகராறு செய்வதை தடுக்கவும், மேலும், இப்பகுதியில் புதியதாக பாஸ்ட் புட் கடைகளை அமைப்பதை தடுத்து பொது அமைதியை பாதுகாக்கவும், போக்குவரத்து இடையூறுகளையும் எடுத்துரைத்து முறையிட்டனர். மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், வார்டு சபாவிற்கு வந்த அதிகாரிகளும் இவற்றிற்கு, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பெரம்பலூர் கலெக்டர் ந. மிருணாளினி ஆய்வு செய்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. வார்டு கவுன்சிலர் மருதாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497