Perambalur: AIADMK booth committee meeting in Melamathur! It was held under the leadership of Alathur union secretary Karnan!
பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம் ஒன்றிய செயலாளர் கர்ணன் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் மோகன், மாவட்டச் செயலாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன், அமைப்புச் செயலாளர் வரகூர். ஆ. அருணாசலம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் திருபுகழ் செல்லதுரை, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிகளில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனையும் பயிற்சியும் வழங்கினர்.
முன்னாள் சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், மாவட்ட அவைத் தலைவர் குணசீலன், மாவட்டத் துணைச் செயலாளர் முத்துசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ரெங்கநாதன், ஆலத்தூர் ஒன்றிய நிர்வாகிகள், அவைத்தலைவர் தொண்டப்பாடி செல்வராஜ், மேலமாத்தூர் திரிசங்கு, கலைமணி, ஜெமீன் ஆத்தூர் சண்முகம், கீழமாத்தூர் ராஜேந்திரன், குரும்பாபாளையம் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிமுத்து, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், செந்தில்குமார், அல்லிநகரம் மோகன், கூத்தூர் ரகுபதி உள்ளிட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்: