Perambalur: An unidentified vehicle ran over a woman who was sleeping under a tree; she died after being crushed to death!!

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி சாந்தி (54). மதுப்பிரியர்கள் விட்டுச் செல்லும் காலி கண்ணாடி பாட்டில்களை பொறுக்கி எடுத்து சென்று மதுக்கடையில் விற்று பணம் பெற்று வரும் வேலையை செய்து வந்துள்ளார். இன்று காலை சுமார் 11 மணி அளவில், ஒயின்ஷாப் அருகே உள்ள வேப்பமர நிழலில் அசதிக்காக படுத்து உறங்கி உள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற, அடையாளம் தெரியாத வாகனம் அந்தப் பெண் படுத்து உறங்குவதை கவனிக்காமல் தலையின் மேல் ஏறிச்சென்றது. இதில், சாந்தி பரிதாபமாக தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்கலமேடு போலீசார், சாந்தியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அடையாளம் தெரியாமல் சென்ற வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!