Perambalur: Collector orders admission of student who requested admission to government school!
பெரம்பலூர் மாவட்டம், வரகுபாடி பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி பிரியங்கா. பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். மாணவிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால் பள்ளியில் தொடர்ந்து படிக்க பெற்றோர் அனுமதிக்கவில்லை, அதனால் ஒரு வருடமாக பள்ளி செல்லாமல் இருப்பதாகவும், வேறு பள்ளியில் சேர்க்க உதவிடுமாறும், ஓரிரு நாட்களுக்கு முன்பு வரகுபாடி பகுதிக்கு ஆய்வுக்குச் சென்ற கலெக்டர் ந.மிருணாளியிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட சிறுவாச்சூர் அரசுப் பள்ளியில் படிப்பை தொடர நடவடிக்கை எடுத்ததுடன், அதற்கான ஆணையை மாணவியிடம் வழங்கினார்.
அப்போது, அந்த மாணவியை தனது அருகில் அமர வைத்துப் பேசிய கலெக்டர், கல்வி ஒன்றுதான் நமக்கான சொத்து. உங்கள் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் நான் கேட்டறிந்தேன். உங்கள் உடலுக்கு ஒன்றும் இல்லை. மன தைரியத்துடன் இருங்கள். தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். நன்கு படியுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என மாணவியிடம் தெரிவித்தார்.