Perambalur: Coordination committee meeting on the development work of Siruvachur Madurakaliamman temple festival!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. அப்போவது அவர் பேசியதாவது:
சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயிலின் பசலி 1433-க்கான சித்திரை பெருந்திருவிழா 14.05.2024 முதல் 27.05.2024 வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கு அதிகளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அசாம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் முதலுதவி குழுவுடன் ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு வாட்டர் டேங்குகள் மூலம் குடிநீர் வசதி செய்து கொடுத்தல், தற்காலிக கழிவறை ஏற்படுத்துதல், குப்பைகளை உடனுக்குடன் அகற்றி அனைத்து இடங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க பணியாளர்களை அதிக அளவில் நியமனம் செய்ய வேண்டும். மருத்துவர்களுடன் கூடிய மருத்துவ குழுவினை உரிய மருந்துகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முதலுதவி உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். திருத்தேரோட்டம் நடைபெறும் 23.05.2024 அன்று பொதுமக்கள் சென்று வர ஏதுவாக கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து துறை அலவலர்ளும் ஒன்றிணைந்து நிகழ்ச்சி எவ்வித அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், என தெரிவித்தார்.
காவல், வருவாய், மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மற்றும் கோயில் செயல் அலுவலர் அசானாம்பிகை, சிறுவாச்சூர் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.