Perambalur: Crusher trucks that were not properly covered with tarpaulins; The collector who put the bridle! Public praise!
கடந்த அக்.4ம் தேதி பெரம்பலூர் கலெக்டர் ந.மிருணாளினி அரியலூர் – பெரம்பலூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். கார் பேரளி அருகே சென்றபோது கலெக்டரின் காரை முந்திக்கொண்டு ஐல்லி கற்கள் ஏற்றிய லாரி சென்றது.
இதைத் கண்ட கலெக்டர் மிருணாளினி லாரியை மறித்து விசாரணை நடத்தினார். அப்போது கல் ஏற்றி செல்வதற்கான முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும், கற்களை உரிய முறையில் தார்ப்பாலின் போட்டு பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டுமென்ற விதிகளை பின்பற்றாமல் வாகனம் இயக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்.டி.ஓ மற்றும் தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சித்தளி அருகே கலெக்டரின் காரை பாரத்த 10க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் சாலையோரம் லாரிகளை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடி தலைமறைவாகினர். ஐல்லி கற்கள் மற்றும் எம்.சாண்டுகளை ஏற்றிக் கொண்டு வந்திருந்த நிலையில் கேட்பாரற்ற நிறுத்தப்பட்ட லாரிகளை பார்த்த கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்திரவிட்டார்.
இந்நிலையில் உரிய நடவடிக்கை மற்றும் அபராதங்களுக்கு பிறகு, தற்போது கிரஷர் மண், ஜல்லிக்கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் அனைத்தும் தர்பாலின் போட்டு முறையாக மூடி எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது மண், கண்ணில் புழுதி விழுவது தடுக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் கலெக்டர் மிருணாளினியை பாராட்டி வருகின்றனர். இதே போல பெரம்பலூர் நகரிலும், போக்குவரத்தை தீபாவளிக்கு முன்னர் சீர் செய்தால் பெரும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கின்றனர்.
விளம்பரம்: