Perambalur: DMK government is trying to do vote bank politics using the Karur incident; DMK leader G.K. Vasan alleges!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மண்டல மாணவரணியின் சார்பில், திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசியதன் சுருக்கம்:

திமுக அரசு மக்கள் மீது சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு பத்திரபதிவு கட்டண உயர்வு, என பல்வேறு பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசு. கவ்விக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறி மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி வாக்கு வாங்கிய அரசு. பல்வேறு கோரிக்கைகளை கொடுத்து ஏமாற்றிய அரசாக வலம் வந்து கொண்டிருக்கிறது என்றும் பெரம்பலூர், குன்னம் சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள குறைகளையும், தமிழக அளவில் உள்ள குறைகளையும் விளக்கி பேசினார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கரூரில் சோகமான ஒரு நிகழ்வு நடந்தது. எல்லோரும் வருத்தப்படக்கூடிய ஒன்று. வேதனை படக்கூடிய ஒன்று. துரதிஷ்டமான சம்பவம். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பொதுமக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. தமிழக அரசு இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது. வாக்கு வங்கி அரசியல் செய்ய நினைக்கிறது என குற்றம் சாட்ட விரும்புகிறேன். தமிழக அரசு கருத்து சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் முடக்க நினைக்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று திமுக அரசுக்கு எச்சரிக்க விரும்புகிறேன். கரூர் சம்பவத்தை காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கக் கூடாது. அதை அரசியல் ஆக்க கூடாது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அந்த சம்பவத்தை இட்டுக்கட்டி தவறாக பரப்புவது ஒருபோதும் ஏற்புடையது அல்ல!. இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை தான் உண்மை நிலையை கொண்டு வரும்‌ என பேசினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ் மூப்பனார் உள்பட பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், ஈரோடு, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து அக்கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், ஏராளமான பெண்கள், இளைஞர்கள் உட்பட தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். மேலும், கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஐஜேகே மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன், ஐஜேகே மாவட்டத் தலைவர் ரகுபதி உள்பட பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!